அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நிறுவனம் சார்ந்தவை

நாங்கள் சென்னை, கோயம்புத்தூர், பெங்களூர் மற்றும் தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நீண்ட தூர மற்றும் குறைந்த தூர போக்குவரத்து சேவைகளை வழங்குகிறோம். தொடர்ந்து பார்த்து வாருங்கள் – நாங்கள் விரைவிலேயே புதிய மையங்களை சேர்க்க இருக்கிறோம்!
உங்களுக்கு இருக்கக்கூடிய எந்த வகையான பிரச்சனைக்கும் உதவி செய்வதற்கு எங்களது ஆதரவு அணியினர் இருக்கிறார்கள். சரக்கு போக்குவரத்து சம்மந்தமான கேள்விகளுக்கு wdsi_operations@wdsi.co.in இல் மின்னஞ்சல் செய்திடுங்கள் அல்லது +91 44 28112287 ஐ அழைத்திடுங்கள்.. பொதுவான தகவலுக்கு, info@wdsi.co.inக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் அல்லது எங்களது இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விசாரணைப் படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்.
எங்களது சேவையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இங்கே பாருங்கள்  இங்கே க்ளிக் செய்யவும்
எங்களது சேவை விதிமுறைகளைப் பொறுத்த வரை, i-Loads மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்/லோடு எடுத்துக்செல்லும் பணியை நிறைவேற்றுவதற்காக இந்த அமைப்பிற்கு வெளியே எந்த ஒரு தரப்பினரும் செயல்படுத்த முயற்சிக்க கூடாது. அவ்வாறு நடந்தால், கையொப்பமிட்ட ஒப்பந்தத்தை சட்டப்படி மீறியதாக கருதப்பட்டு இரண்டு தரப்பினரும் இதில் தொடராமல் விலக்கி வைக்கப்படுவார்கள். எனினும் எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லை என்றால், இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

சரக்கு அனுப்புபவர்

உங்களது சரக்குகளை அனுப்புவது சுலபமாக இருக்க வேண்டும் மேலும் அது சென்று சேர்ந்துவிட்டதா என்பதைக் கண்காணிப்பது இந்நாட்களில் ஒரு தபாலைக் கண்காணிப்பதைப் போன்று எளிதாக இருக்க வேண்டும். இந்த செயல்முறை முழுவதும் ஒரு கடினமான பணியாக இல்லாமல் ஒரு எளிமையான நிலைகளைக் கொண்ட செயலாக இருக்க வேண்டும். நாங்கள் இவை அனைத்தையும் இன்னும் பலவற்றையும் உறுதியளிக்கிறோம்.
எங்களது பதிவுப் படிவத்தை பூர்த்தி செய்யுங்கள், இங்கு க்ளிக் செய்யவும் . உங்களது விவரங்களுடன் அல்லது க்கு எங்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்புங்கள்.wdsi_s@wdsi.co.in. எங்களது விற்பனை அணியினர் உங்களை உடனடியாக தொடர்பு கொள்வார்கள்.
எங்களது தீர்வுகள் மற்றும் சேவைகள் ஒரு தனி வாடிக்கையாளரின் தேவைகளுக்கு பொருத்தமாக இருக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனால், உங்களது தேவைகளைப் பொறுத்து எங்களது சேவையின் விலை மாறுபடலாம்.
இதிலுள்ள போக்குவரத்து சேவை வழங்குவோர் அனைவரும் சந்தை மதிப்பு, நிதி ஸ்திரத்தன்மை மற்றும் செயல்படுத்தக்கூடிய ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் அவ்வப்போது சான்றழிக்கப்பட்டு சரிபார்க்கப்படுகிறார்கள். அனைத்து போக்குவரத்து சேவை வழங்குவோரின் வாகனங்களும் நன்றாக செயல்படும் நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்கு நாங்கள் அனைவரின் வாகனங்களையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பு சோதனை செய்கிறோம்.
ஒரு போட்டிமிக்க விலைநிர்ணய முறைக்கு வழிவகுப்பதற்காக எங்களது விலைக்கூறுதல் மேலாண்மைத் தீர்வுமுறைக்கு உள்ளேயே ஒரு எதிர்திசை ஏலம்விடும் முறையைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் வழங்கப்பட்ட தகவல் போதுமானதாக இல்லை அல்லது தவறானதாக இருந்தால் இறுதி வாடகைக் கட்டணம் ஆரம்பத்தில் வழங்கப்பட்டதை விட வேறுபடலாம். லோடின் விவரங்கள் (எடைகள், கொள்ளளவு போன்றவை), ஏற்றும் அல்லது இறக்க வேண்டிய இடம், திட்டமிடப்பட்ட நேரங்கள் ஆகியவை வித்தியாசமாக இருந்தாலோ அல்லது ஓட்டுனர் உதவியாளர், உபரி பாகம் அல்லது காத்திருப்பு-நேர மாற்றங்கள் ஏற்பட்டால், வாடகையில் மாற்றம் ஏற்படலாம். கூறப்பட்ட விலையை ஏற்றுக்கொள்வதற்கு முன்னால் கட்டமைப்பு சார்ந்த விலை பேரம்பேசுவதற்கான வாய்ப்பினை இந்த அமைப்பு அனுமதிக்கிறது.
உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவிதமான பிரச்சனைக்கும் உதவி செய்வதற்காக எங்களது 24 x 7 ஆணை மையம் உள்ளது.wdsi_operations@wdsi.co.in போக்குவரத்து சம்மந்தமான கேள்விகளுக்கு என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் அல்லது +91 44 28112287 என்ற எண்ணை அழைத்திடுங்கள்..

போக்குவரத்து சேவை வழங்குபவர்

உங்களது வாகனம் அதன் முழு திறனுக்கு ஓட்டப்படுவதுதான் ஒரு பலன்தரும் போக்குவரத்து தொழிலாகும். எனினும் பாதி-காலியாக உள்ள அல்லது பயன்படுத்தாமல் இருக்கும் டிரக் உங்களது வாகனத்தின் செயல்திறனை மேம்படுத்த எந்தவிதமான நன்மையும் செய்யாது. I-Loads உங்களுக்கு தொடர்ச்சியாக லோடுகளை வழங்கும் தரமான வாடிக்கையாளர்களுடன் கூட்டு வணிகத்தை ஏற்படுத்தும், உங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய கட்டணத்தைப் பெற்றுத் தரும் மேலும் நீங்கள் உறுதியாக நம்பக்கூடிய மதிப்பினையும் பெற்றுத்தரும்.
ஒரு செல்லத்தக்க ஆர்.சி மற்றும் காப்பீட்டைக் கொண்ட எந்த ஒரு போக்குவரத்து சேவை வழங்குபவரும் எங்களது அமைப்பில் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ளவராவர். சந்தை மதிப்பு, நிதி ஸ்திரத்தன்மை மற்றும் செயல்படுத்தக்கூடிய ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் ஒரு முழுமையான பின்னணி ஆய்வினை மேற்கொள்வோம். நீங்கள் அங்கீகரிக்கப்பட்டால், இந்த அமைப்பினைப் பயன்படுத்துவதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் நாங்கள் வழங்குவோம்.
எங்களது தீர்வுகள் மற்றும் சேவைகள் ஒரு தனி வாடிக்கையாளரின் தேவைகளுக்கு பொருத்தமாக இருக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனால், உங்களது தேவைகளைப் பொறுத்து எங்களது சேவையின் விலை மாறுபடலாம்.
இல்லை. உங்களிடம் ஏற்கெனவே ஒரு ஜி.பி.எஸ் இருந்தால் நீங்கள் அதை வாங்க வேண்டிய அவசியமில்லை. எனினும் கண்காணிப்புத் தரவினைப் பெறுவதற்கு உங்களது ஜி.பி.எஸ் சேவை வழங்குபவரிடம் இருந்து எங்களுக்கு அனுமதி தேவை. இந்த கண்காணிப்புத் தரவுகள்தான் எங்களது பயண பகுப்பாய்வின் மையக்கருத்தாக திகழ்கிறது.
ஒரு போக்குவரத்து சேவை வழங்குபவர் தனது வாகனத்தை எந்த நேரத்திலும் எங்கிருந்து வேண்டுமானாலும் கண்காணிக்க ஒரு ஸ்மார்ட் ஃபோன் உதவுகிறது. எனினும், அது அவசியமானது அல்ல. எங்களது ஆதரவு அணியினர் குறுஞ்செய்து வாயிலாக அன்றாடம் தற்போதைய நிலை குறித்த தகவல்களை அனுப்புவார்கள். உங்களது வாகனத்தின் நிலை குறித்து தெரிந்துகொள்ள எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீங்கள் +91 44 28112287 எண்ணில் எங்களது ஆணை மையத்தையும் தொடர்பு கொள்ளலாம்.
உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவிதமான பிரச்சனைக்கும் உதவி செய்வதற்காக எங்களது 24 x 7 ஆணை மையம் உள்ளது. போக்குவரத்து சம்மந்தமான கேள்விகளுக்குwdsi_operations@wdsi.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் அல்லது +91 44 28112287 என்ற எண்ணை அழைத்திடுங்கள்..

லாஜிஸ்டிக்ஸ் முகவர்

எங்களது தொழில் கூட்டாளியாவது என்பது நாங்கள் வழங்கக்கூடிய கருவிகள் அல்லது வளங்களையும் விட பெரிய விஷயமாகும். உங்களது சந்தையில் உங்களை அதிக லாபம் ஈட்டும், சிறப்பாக அங்கீகரிக்கப்படும், மற்றும் சந்தேகமின்றி தலைமை நிலையில் இருப்பவராக மாற்றுவதற்கு ஒரே-மனதுடன் நாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாடாகும்.
எங்களது இணையதளத்தில் உள்ள பதிவுப் படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள் அல்லது உங்களது விருப்பத்தைத் தெரிவித்து ஒரு கேள்வியை சமர்ப்பித்திடுங்கள். மேலும் விவரங்களைப் பற்றி கலந்துரையாட எங்களது உக்திசார்ந்த அணியினர் உங்களைத் தொடர்பு கொள்வார்கள். ஒருவரது நிதி நிலைப்பாடு, நிறுவன அமைப்பு, மேலாண்மைத் திறன் மற்றும் செயல்படுத்தும் ஆற்றல் ஆகியவற்றை முடிவு செய்யும் ஒருசில சரிபார்க்கும் செயல்முறைக்கு உட்படுத்திய பின்னர்தான் ஒரு லாஜிஸ்டிக்ஸ் முகவர் ஒரு சான்றளிக்கப்பட்ட நிலையைப் பெறுவார்.
எங்களது தீர்வுகள் மற்றும் சேவைகள் ஒரு தனி வாடிக்கையாளரின் தேவைகளுக்கு பொருத்தமாக இருக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனால், உங்களது தேவைகளைப் பொறுத்து எங்களது சேவையின் விலை மாறுபடலாம்.
i-Loads இல் ஒரு சான்றளிக்கப்பட்ட முகவர் என்ற முறையில், ஒரு பயணத்திற்கான கடனுக்கு விண்ணப்பிக்க உங்களுக்கு தகுதி உள்ளது. எனினும், உங்கள் மற்றும் நீங்கள் சேவை வழங்கும் வாடிக்கையாளர் ஆகியோரின் கடன் நிலையை பரிசோதனை செய்த பின்னர்தான் உங்களது கோரிக்கை அனுமதிக்கப்படும். இந்த கடன் பரிசோதனைக்கான தகுதிகள் அந்த பயணத்தின் தன்மை, எடுத்துச் செல்லப்படும் பொருளின் வகை, வாடிக்கையாளர் மற்றும் போக்குவரத்து சேவை வழங்குபவரின் நிதி நிலை, உங்களது செயல்படுத்தும் ஆற்றல் மற்றும் கடந்தகால நிதி ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடும்.
எந்த ஒரு பயணத்திற்கும் அனுமதிக்கப்படும் கடன் சரக்கை அனுப்புவர் மற்றும் போக்குவரத்து சேவை வழங்குபவர் ஆகிய இருவரையும் சார்ந்ததாக இருக்கும். இரு தரப்பினரும் கடன் பரிசோதனையில் திருப்திகரமாக காணப்பட்டால், அந்த பயணத்திற்கு கடன் பெறும் தகுதியை நீங்கள் பெறுவீர்கள்.
ஆம். நீங்கள் ஒரு தொழில் பங்காளராக எங்களிடம் பதிவு செய்யப்பட்டால், உங்களது வெளி வாடிக்கையாளர்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போக்குவரத்து சேவைகளை வழங்கும் எங்களது கூட்டமைப்பில் உள்ளவர்களை நீங்கள் அணுக முடியும்.
உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவிதமான பிரச்சனைக்கும் உதவி செய்வதற்காக எங்களது 24 x 7 ஆணை மையம் உள்ளது.wdsi_operations@wdsi.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் அல்லது +91 44 28112287 என்ற எண்ணை அழைத்திடுங்கள். கடன் சம்மந்தமான கேள்வி இருந்தால், அவர்கள் உங்களை சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்டு ஃபினான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சம்மந்தப்பட்ட நிதி ஆலோசகரிடம் பரிந்துரை செய்வார்கள்.

முகவரி:

ஒயிட் டேட்டா சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்,
எண்-3 லஷ்மிபுரம் முதல் சந்து, ராயபேட்டை, சென்னை-600014

தொலைபேசி:

1800 313 0203

மின்னஞ்சல்:

info@iloads.in